Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“பிரபல நடிகையின் நான்காவது திருமணம் ரொம்ப நாள் நிலைக்காது”…. முதல் கணவர் ஓபன் டாக்….!!!!!

பிரபல நடிகை ஜெனிபர் லோபஸின் நான்காவது திருமணம் நிலைக்காது என அவரின் முதல் கணவர் ஓஜானி நோவா கூறியுள்ளார்.

பிரபல அமெரிக்கா பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸுக்கும் ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கிற்கும் சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது ஜெனிஃபர் லோபஸ்ஸின் நான்காவது திருமணம். இவர் முன்னதாக ஓஜானி நோவா, கிறிஸ் ஜூட், மார்க் அந்தோணி உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்து விட்டார். தற்பொழுது நான்காவதாக திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் ஜெனிபர் லோபஸின் முதல் கணவர் ஓஜானி நோவா கூறியுள்ளதாவது, பென் அஃப்லெக்கிற்கும் ஜெனிபர் லோபஸுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆனால் திருமணம் நிலைக்காது என்பது எனக்கு தெரியும். காதலில் இருப்பது ஜென்னுக்கு பிடிக்கும். ஆனால் அவருக்கு ஆறு முறை நிச்சயம் நடந்துள்ளது. பென் அவரின் நான்காவது கணவர், நான்தான் முதல் கணவர். நான் தான் அவரின் காதல். திருமணம் முடிந்த அன்று இரவு பென் என்னிடம் கூறியுள்ளதாவது, நாம் எப்பொழுதும் ஒன்றாக இருப்போம் என கூறினார். ஜென்னின் இத்திருமணம் நிலைக்காது என தோன்றுகின்றது. ஜென்னுக்கு ஏழு அல்லது எட்டு முறை திருமணம் நடக்கும் என நினைக்கிறேன். அவர் ஒருவருடன் செட்டிலாக மாட்டார் என கூறியுள்ளார்.

Categories

Tech |