நடிகை காம்னா ஜெத்மலானியின் மகள்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பிரபல நடிகையான காம்னா ஜெத்மலானி ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இதயத்திருடன் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். மேலும் இவர் மச்சக்காரன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சுராஜ் நாக்பல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் இவர் இன்ஸ்டால் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் தனது மகள்களின் புகைப்படத்தை பகிர்ந்த நிலையில் அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கின்றார்களா… நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கூறுகின்றார்கள்.