Categories
சினிமா

பிரபல நடிகையின் மடியில் விஜய் தேவரகொண்டா…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளது.

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்திலிருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச்சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை சொல்லியிருப்பதுபோல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க, கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரயிலில் இருவரும் பயணித்து லைகர் படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டனர். அதாவது ரயிலின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில், விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் போட்டோ சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |