வாலிபர் ஒருவர் பிரபல நடிகையின் வீட்டில் ஏறி குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், முகமூடி, சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அஹானா வீட்டிற்கு வாலிபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவர் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளார்.
இதனால் சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் ஆரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் அஹான்னாவின் தீவிர ரசிகர் என்பதால் அவர் மீது ஒருதலைக்காதலால் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா போதையில் ஏறி குத்தித்து தெரியவந்துள்ளது .மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.