இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. பும்ரா பாண்டியா என இளம் வீரர்களும் ஃபேமிலி மேன் ஆகி வரும் நிலையில், அதிரடி ஓபனார் கே.எல்.ராகுலும் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது காதலி யார் என்பதை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார். நடிகை சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அத்தியா ஷெட்டி தான் தனது காதலி என்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய அதியாவுக்கு ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்தபோது வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது ராகுல் அதை உறுதிப் படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.