பிக்பாஸ் சினேகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராஃப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூலை 29-ஆம் தேதி கவிஞர் சினேகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதன்படி இளம் நடிகை கன்னிகாவை தான் சினேகன் திருமணம் செய்ய இருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.