பிரபல நடிகரை அவருடைய மனைவி செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அம்மா கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவரும் நடிகர் நரேஷ்ம் சமீப காலமாக சேர்ந்து பல இடங்களுக்கு சேர்ந்து செல்வது, குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது என ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக நடிகை பவித்ரா லோகேஷ், நடிகர் நரேஷை காதலிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் நரேஷு,ம் நடிகை பவித்ராவும் ஒரு ஹோட்டலில் ஒன்றாக தங்கி இருக்கும்போது நடிகர் நரேஷின் மூன்றாவது மனைவி அங்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து நரேஷிடம் மூன்றாவது மனைவி ரம்யா அ சண்டை போட்டுள்ளார். அப்போது திடீரென ரம்யா நடிகர் நரேஷை செருப்பால் அடிக்க முயற்சி செய்தார். இவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் நரேஷ் பவித்ராவை ஹோட்டலில் இருந்து அழைத்துக் கொண்டு காரில் சென்ற போது ரம்யாவை பார்த்து விசில் அடித்துக் கொண்டே சென்றுள்ளார்.