தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் தேவ்கனின் இன் பாலிவுட் படமான “மைதன்” படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். இதனால் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அவரது தோற்றம் மாறியதால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விறுவிறுப்பாக ஏறிய அவரது மார்க்கெட் உடல் குறைவினால் அப்படியே சரிந்து விட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் படத்தில் தங்கச்சியாக நடித்தது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
மேலும் சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இந்நிலையில் மீண்டும் அழகாக மாற வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி உள்ளிட்ட ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்த “சர்க்காரு வாரி பட்டா” படத்தில் இவரின் உதடுகள் வித்தியாசமாக இருப்பதை கண்ட ரசிகர்கள் உதடுகளை அழகாக அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.