Categories
சினிமா

பிரபல நடிகை உயிருக்கு ஆபத்து?…. இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் சணல்குமார் சசிதரன் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக சணல்குமார் சசிதரன் கூறியதாவது “நான் மஞ்சு வாரியரை வைத்து திரைப்படம் எடுத்துள்ளேன்.
எனினும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. இதில் மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் போன்றோர் தங்களது கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் நான் மஞ்சுவாரியரிடம் பேசுவதற்கு முற்பட்டபோது வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுவிட்டனர். ஆகவே மஞ்சு வாரியரை வீட்டு காவலில் வைத்து இருக்கின்றனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சு வாரியரை பிளாக்மெயில் செய்கிறார்களோ என்று சந்தேகம் இருக்கிறது. இதுபற்றி மலையாள நடிகைகள் சங்கத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதற்கு மஞ்சு வாரியர் தரப்பிலிருந்து இது வரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |