Categories
சினிமா

பிரபல நடிகை கடத்தல் வழக்கு….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து 7 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலில் மலையாளம் முன்னணி நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திலீப் ஜாமினில் வெளிவந்த நிலையில் விசாரணை அதிகாரி கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பிறகு திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராக வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. மேலும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |