போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார்.
ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் தனக்கு மின்னஞ்சலில் மன உளைச்சல் தரும் படி தகவல்களை அனுப்பியுள்ளதாக 2016ஆம் ஆண்டு கங்கனா வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு ஹிருத்திக்கின் தரப்பில் என் பெயரில் போலியாக இந்த செயலை வேறு யாரோ செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு மும்பை புலனாய்வு துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மும்பை காவல் துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து அவரது தரப்பில் உள்ள நியாயத்தை விளக்கினார்.சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.