Categories
சினிமா

“பிரபல நடிகை சொன்ன ஒரு வார்த்தை”…. பூரித்து போன பிக் பாஸ் நடிகர்….!!!

பிக்பாஸ் போட்டியாளராக வந்து சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த கவின், பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பு கூறியதும் பூரிப்படைந்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் வரும் நடிகர்களில் பலர் சீரியல்களில் நடித்து ஹிட்டானவர்கள். அந்த வகையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள், போன்ற சீரியலின் மூலமாக அதிகம் பாப்புலர் இடத்தை பெற்றவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதையடுத்து லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படம் நேரடியாக ஓடிடி -யில் வெளியாகி பல கலவையான விமர்சனத்தை  பெற்றது. கவின் தற்போது ஆகாஷ்வாணி என்ற பெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஆஹா படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு கவின் பற்றி பெருமையாக பேசியுள்ளார். கவின் ஒரு  ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பு கூறியதை கேட்டதும் மிகவும் பூரிப்பு அடைந்தாராம். அதற்கு கவின் நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |