தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. அவர் ஃப்ரீசர் எனப்படும் ரம்வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் சென்றது. இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட போலீசார் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திடீரென நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.