பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்தத் தொற்று காரணமாக பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் மூலம் பல முக்கிய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பெற்றோர், சகோதரிக்கு தொற்றும் உறுதியானதை அடுத்து தீபிகா படுகோனேவின் தந்தை மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.