Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை…. மகளுக்காக எடுத்த திடீர் முடிவு…. என்னவாயிருக்கும்?…!!!!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டது. எனது மகள் ராதா என் படங்களை பார்த்து பெருமை படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகள் வரை நடிப்பேன்.

இந்த நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்புதான் முக்கிய காரணம். இன்னும் 20 ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை நான் பெறவேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக எந்த அளவிற்கு உழைக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்கிறேன். 10 மாதங்களுக்கு முன்னர் பார்சிலோனாவில் ஒரு மகளை பெற்றெடுத்தேன். அவளுக்கு ராதா என பெயர் வைத்தேன். ராதா வந்த பின்னர் எனது வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. குழந்தையை ஜாக்கிரதையாக வளர்க்க யோசிக்கிறேன். மேலும் எனக்கு கதக் நடனத்தை பின்னணியாக வைத்து வரும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |