பிரபல நடிகை ரகுல் பிரீத்சிங் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் 12 வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் தீவிபத்து நடந்த போது ரகுல் பிரீத்சிங் வீட்டில் இல்லை.
Categories