அமெரிக்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாகாணம் நஷ்வேலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்தியது யார் மற்றும் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து அமெரிக்க போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.