Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிபருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்…!!!

பிரபல நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதுவரை 1,46,965 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கப்புக்கும் தற்போது தொற்று உறுதியாகயுள்ளது. இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் இளைஞர்கள் மற்றும் சமூக நல மந்திரி டாங்க் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |