நேற்று நேபாள நாட்டிற்கு சென்றிருந்த சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ அந்நாட்டின் அதிபர் பித்யதேவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாளம்-சீனா இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, இரு நாடுகளும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.