Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதி…. இந்திய வம்சாவளி நபர்…. பெருமை சேர்த்த நீதிபதி…. !!!!

தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பனை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த நீதித்துறை ஆக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க வருகிறார். நீதி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க விருக்கிறார்.

64 வயதுடைய ராஜேந்திரன் ஜோடி கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் அரசியலமைப்பு உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர். நீதித்துறையில் அதிக அனுபவம் உள்ளவர்கள் இருவரும் வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார். 1982-ஆம் ஆண்டு நீதித்துறையில் பணியாற்றி வரும் இவர் பொதுப் பணியில் ஈடுபாடு கொண்டவர். மேலும் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பில் 1989-ஆம் ஆண்டு இணைந்தார். மேலும் இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 2010-ஆம் ஆண்டு அரசியலமைப்பு கோர்ட் நீதிபதியாக அவர் இருந்தபோது கலாச்சாரம் மற்றும் தேசிய அடையாளம் பற்றி தெரிவித்த வலுவான அறிக்கை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |