ரஷ்யா உக்ரைன் மீது அடுத்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக ஓராண்டு ஆட்சி காலத்தை நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்க மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனாவை ஒழிப்பதற்கும், அதனால் ஏற்பட்ட பணவீக்கத்தை சரி செய்வதற்கும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.