Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் பங்கை உறுதிப்படுத்த…. அமெரிக்கா துணை நிற்கும்.. தகவல் தெரிவித்த பென்டகன்….!!!!

இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியா தனது பரந்த பங்கை உறுதிப்படுத்தி அமெரிக்கா துணை நிற்கும் என அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது “இந்தியா தனது சொந்த பாதுகாப்பு நவீனமயமாக்கலை எவ்வாறு துரிதப்படுத்துகின்றது என்பதைப் பார்க்கும்போது, இந்திய பெருங்கடலுள்ள பகுதியில் நிகர பாதுகாப்பு வழங்குனராக இந்தியா சிறப்பாக பங்கு வகிக்கின்றது. அதே சமயத்தில் இந்தோ-பசிபிக் பகுதியில் இன்னும் பரந்தளவில் இந்தியா தனது பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புகின்றது. இதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |