கேரள முதல்-மந்திரியின் அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் தனது உடல்நிலை பிரச்சனை காரணத்தினால் அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் மாயோ கிளினிக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கின்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் அங்கிருந்தபடி அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைனில் கலந்து கொண்டுள்ளார். மேலும் முக்கிய கோப்புகளில் மின்னணு முறையில் கையொப்பம் இட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்தபின்னர் நேற்று கேரளா திரும்பியுள்ளார்.
சிகிச்சை காலத்தில் உதவிக்காக அவரது மனைவி கமலா மற்றும் நேர்முக உதவியாளர் சுனீஷ் போன்றோர் அவருடன் சென்றிருந்தனர். இந்தநிலையில் அவரது அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.