பிரித்தானியாவிலிருந்து ஜெர்மனி முதலான நாடுகளுக்கு வாகனங்களை கொண்டுவர கூடுதல் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 இல் பிரக்சிட் முறை கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் தங்கள் வாகன உரிமங்களை ஜெர்மானிய உரிமங்களாக மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். தற்போது மேலும் சில வழிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022 ல் இருந்து பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேன் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கொண்டுவரும் ஓட்டுநர்கள் சரக்கு வாகனங்களுக்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் .
இந்த திட்டம் 2022 மே மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பதாக இருக்காது. பெரிய வாகனங்கள் ஓட்டுபவர்கள் மட்டுமே இந்த திட்டம் சில சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும் நீங்கள் எதற்காக ஜெர்மனிக்கு வருகிறீர்கள் என்பது குறித்த விளக்கமும் இந்த திட்டத்தில் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.