சுவிட்சர்லாந்திலுள்ள தமிழர்கள் தங்களின் பாரம்பரியமிக்க நிகழ்ச்சியான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில் நடப்பாண்டின் தைப்பொங்கலை சுவிட்சர்லாந்திலுள்ள நீட்வால்டன் மாநிலத்தின் தமிழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளார்கள். இந்த தைப்பொங்கலை திரு. முரளிதரன் என்னும் தமிழர் ஒன்றிய தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.