Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்…. 8 பேர் சுட்டுக்கொலை… பெரும் சோகம்…!!!!!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் வன்முறை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது, பெரிய அளவில் கூட துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் அந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதுபற்றி துப்பாக்கி வன்முறை ஆவணப் பதிவு செய்யும் ஆய்வுக்குழு ஒன்றை வெளியிட்ட செய்தியில், நடப்பாண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 140 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றது.

7,500 வழிகளில் இருந்து தினசரி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பதிவு செய்யப்பட்டவையாகவும், ஆய்வு செய்யப்பட்டவையாகவும்,  சம்பவங்களின் எண்ணிக்கை உள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என நகர போலீசார் தெரிவித்ததுள்ளனர்.

பிரைட்டன் பூங்கா, தெற்கு இண்டியானா, வடக்கு கெத்ஜி அவென்யூ, ஹம்போல்ட் பூங்கா உள்ளிட்ட நகரங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இந்நிலையில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது.  இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவை  நடத்தப்படும்.

இந்நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.  மேலும் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
விடுமுறை நாட்களில் கூட அமெரிக்காவில் மக்களை இலக்காக கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து வருவது அதிகரித்து காணப்படுகின்றது.  இதனை எதிர்கொள்ள பைடன் தலைமையிலான அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்திருக்கிறது.

Categories

Tech |