இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் கூடுதலான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு அளவிற்கு எரிபொருள் உபயோகத்தை குறைக்கும் வகையில் இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க பல மணி நேரங்கள் மின்தடை செய்யப்பட்டுள்ளது.இத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் கூட இலங்கையில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் இலங்கை மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலவி வரும் பெட்ரோல் தட்டுப்பட்டால் இலங்கையில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவசர தேவைக்காக அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் உதவி என்னான 1990 என்கின்ற எண்ணிற்கு அழைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசர காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.