அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இந்தியனா போலிஸ் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணி சேட்டா (20)என்பவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு பயின்று வந்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேட்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது அறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்துள்ளது. இந்த கொலையில் அவருடன் தங்கி இருந்த தென்கொரியாவை சேர்ந்த சக மாணவரான ஜி மின் ஜிம்மி ஷா(22) என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் பற்றி வருண் மணிஷ் சேட்டாவின் பாலிய கால நண்பர் அருணா சின்கா பேசும்போது சேட்டா சம்பவத்தன்று இரவில் தனது நண்பர்களுடன் ஆன்லைனில் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்துள்ளார். அப்போது திடீரென அலறும் சத்தம் கேட்டுள்ளது என்ன நடந்தது என்று தெரியவில்லை இதனை அடுத்து காலையில் எழுந்தவுடன் சேராவின் மரண செய்தி தான் கிடைத்தது எனக் கூறியுள்ளார். மேலும் இந்த கொலையின் பின்னணி என்ன என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை இந்த நிலையில் இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.