Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இனி வெள்ளிக்கிழமை மோட்டார் போக்குவரத்து துறை மூடல்?…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் கூடுதலான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் சைக்கிள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சைக்கிள் கடைகளில் விற்பனை சூடுபடித்துள்ளதால் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவு போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து பிரச்சினைகளின் விளைவாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே.அழகோன் தெரிவித்தார். எனவே இந்த துறை அதிகாரிகள் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 27ஆம் தேதி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றியறிக்கையில், வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை திறப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை நாட்களில் முற்பகல் 9 மணி முதல் 4 மணி வரை தொலைபேசி எண்கள் மூலம் சேவைகள் தொடர்பான எந்த விளக்கத்திற்கு துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |