Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இப்படியுமா…போதை பொருள் கடத்தல் ….அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

கொலம்பியா காவல்துறை, வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 1300 கிலோ கிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவத்திலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இது போன்ற போதைப் பொருட்களை கடத்துவதற்கு, பல புதுமையான உத்திகளையும் கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாகும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களை, போதைப் பொருளின் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ டுவிட்டரில்    வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வீடியோவானது கொலம்பியா பாதுகாப்புத்துறையின் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது . இதையடுத்து அந்த டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது,   உருளைக்கிழங்கு  போதைப் பொருட்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஸ்பெயின் நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதனை போதைப் பொருள்  தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்றும்  கூறப்படுகிறது. எனவே இம்மாதிரியான சம்பவத்தினை தடுக்கும் வகையில் சிறைத்துறை அதிகாரிகள், பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் குழுவினை சிறையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |