அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டிருகின்ற தகவலின் படி 2022 ஆம் வருடம் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவிகிதம் என்னும் அளவில் சரிந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து குறைந்த தனியார் பங்கு முதலீடு பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் போன்றவையே இந்த சர்விற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அங்கு நுகர்வு செலவுகள் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதியின் பங்கு 1.42 சதவீதமாக இருக்கிறது எனவும் அந்த நாட்டின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Categories