ஜெர்மனியை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த மற்றொரு நாயின் உரிமையாளரான 27 வயதுடைய பெண்ணொருவர் நாயை எதற்காக அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சண்டையில் 57 வயதான பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த 27 வயதுடைய பெண்ணின் காலில் கடித்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 2 பெண்களுக்கும் இடையே நடந்த சண்டையின் போது அவர்களுடைய நாய்கள் மிரண்டு போய் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் அவை கடிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடல் உபாதைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் பெண்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.