இளம்பெண்ணை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 வயதுடைய மஹ்சா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியாமல் வந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை கைது செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு போலீசார் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் ஹிஜாப் பணியாத ஈரானிய பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை உலகின் கவனத்தை பெற்றுள்ளது. இதனையடுத்து நேற்று ஏராளமான பெண்கள் போராட்டத்தில் குவிந்தனர். இதுகுறித்து அந்நாட்டின் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் ஏற்கனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் என்னும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படுகொலை போராட்டத்தை மிகவும் தீவிரப்படுத்தி உள்ளது. மஹ்சா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் மஹ்சா அமினியின் கல்லறை அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு ஹிஜாப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்துள்ளது. மேலும் ஹிஜாப் அமலாக்க ரோந்து படையினரால் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில் பெண்களை தெருக்களில் சில சமயங்களில் கொடூரமாக காவல்துறையினர் தாக்குவது குறிப்பிடத்தக்கது.