நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி போர்ச்சுகல் நாட்டில் பொதுச் சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வார பாதிப்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலகட்டத்தில் 65,324 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 123 ஆக உள்ளது. இது அதற்கு முந்தின வாரத்துடன் ஒப்பிடும்போது 27 எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளுக்காக 1,213 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தின வார்த்திற்கு ஒப்பிடும்போது 228 குறைவாக உள்ளது. மேலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நபர்களில் 485 பேர் 80 வயதுக்கும் கூடுதலான முதியவர்கள். அவர்களை தொடர்ந்து 70-79 வயதுக்கு உட்பட்டவர்களும் மற்றும் 60-69 உட்பட்டவர்களும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.