பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை 43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பொருட்களின் விலை 17.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் சேவைகளின் விலை 4 சதவீதமாகவும், வீடுகளின் விலை 1.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் மாதாந்திர அடிப்படையில் அக்டோபர் 2022 -இல் நுகர்வோர் விலைகள் 0.9 சதவீதமாக அதிகரித்து வருகிறது.