Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை…. கழுதையில் பணிக்கு வர அனுமதி கோரிய விமான போக்குவரத்து ஊழியர்….. நகைச்சுவை கடிதம்….!!!

பாகிஸ்தானில்  பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86, டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில்  தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும்  ஊழியர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ராஜா ஆஷிப் இக்பாலுக்கு எழுதிய கடிதம் எழுதினார்.

அதில், “பணவீக்கம் ஏழைகளின் முதுகை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரையும் உடைத்துவிட்டது. மேலும் பெட்ரோல் விலை உயர்வால் தனிநபர் போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது கழுதை வண்டியை விமான நிலையத்திற்கு கொண்டு வர அனுமதிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |