Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் உள்ள ஒரு தெருவிற்கு… விநாயகர் கோவில் தெரு என பெயர் சூட்டல்…! எங்கு தெரியுமா…?

அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருவிற்கு விநாயகர் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் மிகப் பழமையான இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்தக் கோவில் தெருவிற்கு போவின் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் போவின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தெருவின் அடையாளமாக இந்த விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. அதனால் இந்த தெருவிற்கு விநாயகர் கோவில் தெரு என இணை பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கடந்த 2ஆம் தேதி நடந்த இந்த பெயர்சூட்டு நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் ஜெய்ஸ்வால், நியூயார்க் மேயர் அலுவலக அதிகாரி ஏரிக் ஆடம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |