Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஒரு நற்செய்தி… படிப்படியாக குறையும் பாதிப்புகள்… சுகாதார அமைச்சர் தகவல்..!!

ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் நாட்டின் நிலை குறித்து நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த போது கொரோனா தொற்று 3-வது அலை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவான தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் கொரோனா தொற்று பரவும் வீதத்தை குறைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார். அதில் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டவர்களின் சதவீதம் ஜெர்மன் மக்கள் தொகையில் 31.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் முதல் டோஸ் தடுப்பூசியை வியாழக்கிழமை மட்டும் 9 லட்சம் பேர் போட்டுள்ளனர். ஜெர்மனி சர்வதேச அளவில் வேகமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். மேலும் எல்லா வயதினரிடமும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறியுள்ளார் . ஜெர்மனி விரைவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் லோதர் வைலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |