பிரித்தானிய கடல் படுகையில் ரஷியா கன்னிவெடிகள் வைத்திருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷியா கடற்பரப்பு தாக்குதலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவை கடல் நீருக்கடியில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட்ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டது. அந்த கசிவு சரி செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து டென்மார்க் தொடர்ந்து விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட இந்த கசிவு முறைகேடான தாக்குதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. ரஷியாவை மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது. ஆனால் அதற்கு ரஷியா ரமறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் டென்மார்க் டெய்லி மெயில் செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் டேனிஷ் விசாரணையில் கசிவுக்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அது எப்படி செய்யப்பட்டது என்ற கேள்வியும் இருக்கிறது. இந்நிலையில் கடலுக்கு அடியில் உள்ள நமது முழு கட்டமைப்பை சுற்றி பல ஆண்டுகளாக சந்தேகத்திற்கிடமான ரஷியா நீர் மூழ்கி கப்பல் செயல்பாடு இருப்பதாகவும், ஆகவே பிரித்தானியா அதன் கடல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பாலூட்டிக் கடல் பகுதியில் எரிவாயுக் குழாய்களின் மீதான ரஷியாவின் தாக்குதலை தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben Wallace நாட்டின் கண்காணிப்பு திறன்கள் கூடிய HMS சோமர் செட் போர்க்கப்பலை இந்த வாரம் வடகடல் பகுதிக்கு அனுப்பி வைத்தார். மேலும் பிரித்தானிய கடல் படுகையில் முக்கிய பைப் லைன்கள் மற்றும் இணைய கேபிள்களுக்கு அருகில் கன்னிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் தேசிய பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளர் Ben wellace நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களுக்கு ஏற்பட்ட சேதம், கலப்பின தாக்குதலை எதிர்கொள்ளும்போது பிரித்தானியாவின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதை நினைவூட்டுகிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.