இத்தாலி நாட்டில் கடுமையான வெயிலினால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினால் 30% கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு விவசாய சங்கம் மிகுந்த வேதனை அளித்தது. அதனை தொடர்ந்து இத்தாலியின் நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள லோம் பார்ட்டி, எமிலியா- ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா,பிட்மாண்ட் மற்றும் வெனெட்டா ஆகிய 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 5 வடக்கு பிராந்திகளில் இத்தாலி அரசு அவசர பிரகடனப்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், அவசர நிலையை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வாகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.