மலேசிய அரசாங்கம் தற்போது கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கொடுக்கப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரண தண்டனைக்குப் பதில், மற்ற தண்டனைகளை விதிக்க போவதாக, மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் என்பவர் தெரிவித்துள்ளார்.
எனவே இதுவரை சட்டப்படி 11-வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 22-குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பத்திற்கும் சட்டத்தில் ஒப்புதல் உள்ளது. இந்நிலையில், தற்போது கட்டாய மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மரண தண்டனைக்கு பதில், வேறு கடுமையான தண்டனைகளையும், வழங்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் தற்போது வரை 1,300-க்கும் அதிகமானோர், மலேசியா சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஊடகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் மரண தண்டனையை தக்கவைத்துக்கொள்ளும் நாடுகள், மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.