சீன தலைநகர் பிஜிங்கில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.