உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காங்கோ நாட்டில் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கேசஸ் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது மிகவும் வாடிக்கையாக ஒன்றே என்று கூறப்படுகின்றது. தற்போது நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ள தகவலை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உகாண்டா நாட்டின் காவல்துறை தரப்பில் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.