கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்விக்க முயற்சித்து வருகிறது. இதனால் அரசு படைகள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அடிக்கடி வன்முறை தாக்குதலை அரங்கேற்று வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஹிர்ஷபெல்லி மாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள் விவகாரங்கள் துறை மந்திரியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் அல்கொத்யா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அலஷாபாப் பயங்கரவாத அமைப்புடன் பொறுப்பேற்று உள்ளது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.