பிரபல நாட்டில் புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஈராக்கின் மீது புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் குர்திஸ்தான் பகுதியில் 10 மில்லியனுக்கும் அதிகமாக குர்துகள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 58 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்து தாக்குதலால் குர்தீஸ்தான் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.