Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொடூர கத்திக்குத்து சம்பவம்…. உறவுகளை இழந்து தவிக்கும் மக்கள்….. இரங்கல் தெரிவித்த பிரதமர்….!!!!

கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டின் சஸ்கட்சவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன் , வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி  குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கத்தி குத்து சம்பவத்தில் டமியின்  சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாக அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கொடூர சம்பவம் பற்றி பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவு செய்துள்ளார். அதில் நடந்த இந்த கத்திக்குத்து தாக்குதல் கொடுமையானவை மற்றும் இதயத்தை உடைப்பவை. தங்களை நேசிப்பவரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்தவர்களை பற்றி நினைத்து பார்க்கிறேன் என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |