Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கோர சம்பவம்…. குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் குண்டுவெடிப்பு…. 6 பேர் உள்பட படுகாயம்….!!

போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

அமெரிக்கா நாட்டில் சிகாகோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த  நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன. இதனால் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளியில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து மீட்பு  பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.

 

Categories

Tech |