சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்தோனேசியா நாட்டில் யோக்யகார்த்தா மாநகரில் பந்தல் என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தெரியாததால் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.