இன்று காலை சிலி நாட்டில் உள்ள கோபியாப்போ என்ற சுரங்க நகர் பகுதியில் இருந்து வடமேற்கே கடற்கரையோர பகுதியில் சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.