சிலியில் முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோஷெட்-ன் மனைவி உயிரிழந்ததை நூற்றுக்கணக்கானோர் இணைந்து கொண்டாடினர். 1973-ஆம் ஆண்டு நடந்த ராணுவ கிளர்ச்சியில் ஆட்சியை கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்த அகஸ்டோ பினோஷெட் என்பவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், 99 வயதைக் கொண்ட அவருடைய மனைவி Luciya Hiriart தற்போது உயிரிழந்துள்ளார்.
சர்வாதிகாரியான அகோஸ்டோ பினோஷெட்டின் மனைவி அவருடைய பின்னாலிருந்து இயற்றியதாக கருதப்படும் நிலையில், சாண்டியாகோ வீதிகளில் குவிந்த பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அகஸ்டோ பினாஷெட்-ன் ஆட்சிக்காலத்தில் 3,000- க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், பல 1000 பேர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.